ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கல்லூரி மாணவன் : நடந்த விபரீதம்!!

551

சென்னை…

சென்னை மாநிலக் கல்லூரியில் எம்எஸ்சி படித்து அந்த திரிஷாத் என்பவன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தனது சொந்த ஊர் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சென்றிருக்கிறான்.

அப்போது தனது நண்பரை நண்பரையும்,  அவரின் மனைவியையும் அழைத்து இருக்கிறான். அவர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக திரிஷாத்துடன் ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

கூட்டேரிப்பட்டு வீட்டில் இருந்தபோது குழந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து நண்பரின் மனைவி உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார்.

 சென்னை வந்து குழந்தை நல மருத்துவரிடம் சென்று குழந்தையை பரிசோதிக்க சென்றபோது ,  குழந்தையை பரிசோதித்த மருத்துவர் சொன்ன தகவலை கேட்டு அந்த தாய் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

குழந்தை பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் மருத்துவர். இதையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த தாய் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் கல்லூரி மாணவன் திரிஷாத்தை அழைத்து போலீசார் விசாரணை செய்தபோது அந்த ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறான். இதையடுத்து போலீசார் அவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.