ஒன்றரை வயது பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொடூர கொலை : பொலிசாரிடம் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!!

225

கொச்சி…

கொச்சியில் இரு பேரக் குழந்தைகளுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கிய பெண் ஒருவர், தனது காதலனுடன் சேர்ந்து, அதில் ஒரு பெண் குழந்தையை கொலை செய்து விட்டு, உடல் நலக்குறைவால் பலியானதாக நாடகமாடி சிக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. தண்ணீர் வாளியில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட பிஞ்சுக் குழந்தையின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கேரள மாநிலம் அங்கமாலி பரக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சஜூஸ். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இதனால் சஜூஸ் தனது இரு குழந்தைகளையும் அவரது தாயார் ஸிக்ஸியின் கவனிப்பில் விட்டுச்சென்றுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஸிக்ஸி தனது இரு பேரக் குழந்தைகளையும் , உள்ளூர் இளைஞர் ஜான் பினோய் என்பவருடன் அழைத்துக் கொண்டு கொச்சியில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

சில மணி நேரம் கடந்த நிலையில், அதில் ஒரு குழந்தைக்கு உடல் நலக்குறைவு எனக் கூறிய ஸிக்ஸி, அந்த குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு தனது காதலனுடன் அறையை காலி செய்து விட்டு வெளியேறி உள்ளார். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் கொச்சி போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் சென்ற ஸிக்ஸி குழந்தை வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து விட்டது என்று கூறி உள்ளார். அதனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று கூறி உள்ளனர்.

இதற்கிடையே ஸிக்ஸியை மடக்கிய போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொல்லப்பட்ட குழந்தையின் பாட்டியான ஸிக்ஸியின் பயங்கர காதல் வெளிச்சத்திற்கு வந்தது.

மகளுக்கு திருமணமாகி பேரக்குழந்தைகள் எடுத்த நிலையில் 51 வயதானாலும் தன்னை இளம் பெண் போல அலங்கரித்து கொள்ளும் வழக்கம் கொண்ட ஸிக்ஸிக்கு ஜான் பிணோய் என்ற இளைஞருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. மருமகன் இருப்பதால் வீட்டிற்கு வர இலயலாமல் தவித்த காதலனை சந்தித்த ஸிக்ஸி, கடந்த 7 ம் தேதி கொச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தம்பதி எனக்கூறி அறை எடுத்து தங்கி உள்ளனர்.

அப்போது, இரு குழந்தைகளையும் உடன்அழைத்து வந்தது ஏன்? எனக் கேட்டு ஜான் பிணோய் சண்டையிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் தாங்கமுடியாத சிக்ஸி தனது இரண்டு பேரக்குழந்தைகளையும் அறையில் விட்டுவிட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். தனது பாட்டி சண்டையிட்டு வெளியேறுவதை பார்த்த ஒன்றரை வயது பெண் குழந்தை வீறிட்டு அழுதுள்ளது.

இதனால் கோபமடைந்த பினோய் , ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையை தூக்கிச்சென்று கழிவறையில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்துள்ளான். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அறையினுள் வந்து இருந்துள்ளான்.

இதற்கிடையே வெளியே சென்ற சிக்ஸி சமாதானம் அடைந்து அறைக்கு வந்தபோது, குழந்தை தண்ணீர் வாளியில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இதனைக் கண்ட சிக்ஸி தனது காதலனை காப்பாற்றும் நோக்கில் அறையிலிருந்து குழந்தையை எடுத்துகொண்டு வெளியேறியதோடு, ஓட்டல் ஊழியர்களிடம் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது என நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பினோய் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த பினோயையும் அவனுக்கு உடந்தையாக இருந்த ஸிக்ஸியையும் கைது செய்தனர்.காலம் போன காலத்தில் காதல் வந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!