ஒரு குடும்பத்தையே கத்தியால் குத்தி சாய்த்த சாமியார் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

461

கத்தி குத்தி….

பரிகார பூஜையை பரிகாசம் செய்ததால் ஒரு குடும்பத்தையே கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்து இருக்கிறார் சாமியார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சாமியாரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் விஷ்ணு சாஹூ. இவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகளும் 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

மகனுக்கு மனநிலை பிரச்சனைகள் இருந்து உள்ளது. இதை அடுத்து விஷ்ணு தனது மகன் குணமாக வேண்டி தினு சாமியாரைப் போய்ப் பார்த்து இருக்கிறார். அவர் வீட்டிற்கு வந்து வீட்டிலேயே பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 இதையடுத்து விஷ்ணுவும் பரிகார பூஜை ஏற்பாடுகள் செய்து இருக்கிறார் . நேற்று மதியம் விஷ்ணுவின் வீட்டிற்கு சென்று சாமியார் சிவ பூஜைகளை செய்து இருக்கிறார்.

பூஜைகள் முடிந்ததும் அது குறித்து தனது கருத்தை சாமியாரிடம் தெரிவித்திருக்கிறார் விஷ்ணு. அதாவது சாமியாரின் அந்த பரிகார பூஜையை பரிகாசம் பண்ணுவது போல் பேசியிருக்கிறார்.

இதில் சாமியாருக்கு கடும் ஆத்திரம் உண்டாகி இருக்கிறது . ஆனாலும் அப்போது வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கிக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனாலும் விஷ்ணுவின் குடும்பத்தின் மீது உள்ள ஆத்திரம் சாமியாருக்கு அடங்கவில்லை.

இதனால் மாலையில் பிரசாதம் கொடுக்க வேண்டுமென்று விஷ்ணு வீட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது விஷ்ணுவும் அவரது மனைவியும் பிள்ளைகளும் இருந்துள்ளனர்.

பிரசாதம் கொடுக்கிறேன் என்று சொல்லி வீட்டிற்குள் நுழைந்த பின்னர் சாமியார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக விஷ்ணுவையும் அவரது மனைவியையும் பிள்ளைகளையும் குத்தியிருக்கிறார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்திருக்கிறார்கள் . சாமியார் சரமாரியாக குத்தியதில் அவர்கல் போட்ட அலறல் சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தாலும் தப்பித்து ஓடி இருக்கிறார் சாமியார் .

அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர் . போலீசிடம் அவர்கள் ஒப்படைக்கவும் கொலை முயற்சி வழக்கில் அவரைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

விஷ்ணுவையும் அவரது குடும்பத்தினரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிகார பூஜை செய்ய வந்த ஒரு சாமியார் ஒரு குடும்பத்தையே சரமாரியாக கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்துள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.