ஒரு கையில் குழந்தையுடன் 265 கி.மீற்றர் நடந்து செல்லும் பெண் : கொரோனாவால் பரிதாபம்!!

1096

கொரோனாவால் பரிதாபம்..

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையில், பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கைகளில் சுமந்த படி சுமார் 265 கி.மீற்றர் நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை வேதனையடைய வைக்கிறது.

உலகையே அ ச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோயின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதன் படி இந்தியாவில் வரும் 17-ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயங்கினாலும் அதில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் ஏழை எளிய மக்கள் கடந்த பல வாரங்களாக வேலையின்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் போது அவ்வளவு கட்டணத்தை எப்படி செலுத்த முடியும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து அலகாபாத் வரை சுமார் 265கி.மீற்றர் ஒரு கையில் குழந்தையுடனும் இன்னொரு கையில் சூட்கேசுடன் ஒரு பெண் நடந்தே சென்று கொண்டிருக்கும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பக்கம் சென்றவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, சூரத்திலிருந்து அகமதாபாத்திற்கு சிறப்பு இரயில்கள் செல்கின்றன. ஆனால் கட்டணம் அதிகமாக இருப்பதால் தன்னிடம் இரயிலில் செல்ல பணம் இல்லை என்பதால்குழந்தையுடன் நடந்து செல்வதாக கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல கட்டணம் இல்லா இரயில்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.