ஒரு முத்தம் : பெண்ணாக மாறிய ஆண் : விநோத சம்பவம்!!

998

 

சென்னையில் மாணவர் ஒருவர் காதலி முத்தம் தருவதாக கூறியதால் பர்தா அணிந்து சென்ற காதலனை திருடன் என நினைத்து பொதுமக்கள் பொலிசில் ஒப்படைத்ததையடுத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பப்பட்டுள்ளார்.

ஐ.டி.ஐ. மாணவரான சக்திவேல் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலர் தினத்தன்று இவர் தனது காதலியிடம் ஒரு முத்தம் கேட்டுள்ளார்.

ஆனால், காதலி ஒரு நிபந்தனை விதித்துள்ளார். பர்தா அணிந்து பெண் வேடம் போட்டு ராயப்பேட்டையில் இருந்து மெரினா கடற்கரை வரை நடந்து வந்தால் முத்தம் தருவதாக கூறியுள்ளார்.

முத்தத்துக்கு ஆசைப்பட்ட காதலனும் பர்தா அணிந்துகொண்டு சென்றுள்ளார். காலில் செருப்பு இருப்பதை பார்த்த பொதுமக்கள் திருட வந்துள்ளான் என நினைத்து பிடித்து பொலிசிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து நடந்தவற்றை பொலிசிடம் காதலன் விளக்கியதையடுத்து எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளார்.