ஒரே ஒரு மொபைல் அழைப்பால் நொறுங்கி உடைந்த இளம்பெண் : அதிர்ச்சி பின்னணி!!

395

பீகார்….

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பப்புகுமார் ஷா (வயது 26). இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் உல்லாஸ் நகர் என்னும் பகுதியில் தங்கி, தனக்கு கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து, பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

பப்பு தங்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் கமல்ஜித். இவரின் மகளுடன் பப்புகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம், இருவருக்கும் இடையே காதலாகவும் மலர்ந்துள்ளது.

தொடர்ந்து, தன்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசுவதற்காக, கமல்ஜித் வீட்டிற்கு, பப்பு பெண் கேட்டுச் சென்றுள்ளார். தன்னுடைய விருப்பத்தை பப்பு தெரிவிக்கவே, அதனை முற்றிலும் மறுத்து விட்டார் கமல்ஜித். காதலின் தந்தை கமல்ஜித் மறுக்கவே, வீட்டை விட்டு வெளியேறினார் பப்பு குமார்.

இருந்தும் சில தினங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஜித்தை அவரது வீட்டில் சென்று, பப்பு சந்தித்துள்ளார். அங்கு சென்ற பப்பு, தன்னுடைய செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார். இனிமேல் இப்படி நடக்காது என்றும் அவர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஜித்திடம் சமரசம் ஆன பிறகு, அவரை ஒரு பார்ட்டிக்கு அழைத்துள்ளார் பப்பு குமார். அவரின் அழைப்பை ஏற்று, அந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார் கமல்ஜித்.

அங்கு இருவரும் மது அருந்தவும் செய்துள்ளனர். குடிபோதையில், தன்னுடைய காதலியின் தந்தை கமல்ஜித்தை அருகிலுள்ள பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்ற பப்பு, மகளைத் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில், அவரைக் கொலை செய்துள்ளார்.

இன்னொரு பக்கம், பார்ட்டிக்கு சென்ற கமல்ஜித்தின் வருகைக்காக, அவரது குடும்பம் வீட்டிலேயே பல மணி நேரமாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கமல்ஜித் திரும்பி வரவே இல்லை. அந்த சமயத்தில் தன்னுடைய காதலியை மொபைல் போனில் அழைத்த பப்பு குமார், இனி உன் தந்தை திரும்பி வீட்டுக்கு வரப் போவதே இல்ல. நான் அவரை கொன்று விட்டேன் எனக்கூறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனைக் கேட்டு, கமல்ஜித்தின் மகள் அதிர்ச்சி அடையவே, போலீசாரிடமும் தனது காதலர் பப்பு குமார் பற்றி புகார் அளித்துள்ளார். இதுபற்றி உடனடியாக விசாரணை மேற்கொண்ட போலீசார், கமல்ஜித்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல், பப்பு குமாரை கைது செய்து, சிறையிலும் அடைத்துள்ளனர்.

தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், காதலியின் தந்தையை திட்டம் போட்டு பார்ட்டிக்கு அழைத்து சென்று, அங்கு வைத்து அவரை கொலை செய்த காதலனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தன்னுடைய காதலிக்கே போன் செய்து, தந்தை இனி வரமாட்டார் என்றும் காதலன் கூறிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.