ஒரே வீட்டில் 11 பேர் தற்கொலை… சிக்கிய அமானுஷ்ய கடிதத்தில் இருந்த கதிகலங்க வைக்கும் தகவல்

1565

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மிகவும் அமானுஷ்யமான கடிதங்கள் சில டெல்லி போலீசால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று டெல்லியின் புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.அந்த வீட்டில் உள்ளே 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் கண்களும் வாய்களும் துணிகளால் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.

மொத்தம் 7 பெண்கள் மற்றும் 4 ஆண்களின் சடலங்கள் அந்த வீட்டில் இருந்துள்ளது. இதில் ஒருவர் மூதாட்டி. அவர் மட்டும் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீவிர விசாரணையில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

இவர்கள் வீட்டில் நிறைய கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் நிறைய புத்தகங்களும் கிடைத்துள்ளது. இது முழுக்க முழுக்க வாழ்க்கை குறித்து, மறுவாழ்வு குறித்தும், அமானுஷ்யம் குறித்தும் இருந்துள்ளது. எப்படி தற்கொலை செய்தால் சொர்க்கத்தை அடையலாம், என்ன செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றெல்லாம் நிறைய குறிப்புகள் இருந்துள்ளது.

அதில் இருந்த முக்கியமான கடிதம் ஒன்றில், தற்கொலை பற்றி ஒரு தகவல் இருந்துள்ளது. அதன்படி நம்முடைய கண்களையும், வாயையும் மூடிக்கொண்டு தற்கொலை செய்தால் கண்டிப்பாக சொர்கமும் மோட்சமும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 10 பேர் இப்படித்தான் இறந்து கிடந்தார்கள். ஒரு மூதாட்டி மட்டும் கொல்லப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு குடும்ப கஷ்டம் என்று எதுவும் இல்லை. இவர்களுக்கு சொத்தும் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் யாரோ இப்படி எல்லாம் பேசி அவர்கள் வாழ்க்கையை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபர் யார் என்று தெரியாத நிலையில் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.