கசந்து போன நடிகை கௌதமியின் வாழ்க்கை? கண்ணீருடன் தொடரும் சோகம்! உடைந்து நொருங்கிய காதல்!

1018

நடிகை கௌதமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகின்றார்.

அவர், இந்த இடத்தில் தனது பெயரை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சோதனைகளை தாண்டி வந்துள்ளார்.கடந்த 1998ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தார். பல்வேறு சர்ச்சைகளுடன் தொடர்ந்த இவரின் வாழ்விற்கு முடிவு கட்டுவதாக கூறி பிரபல தொழிலதிபரை விவாகரத்து செய்தார்.

இவருக்கு ஒரு மகளும் உள்ளனர். தனிமையில் இருந்த இவர் 2005 இல் இருந்து நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வந்தார்.கடந்த வருடம் நடிகர் கமல்ஹாசனை விட்டும் கௌதமி பிரிந்து சென்று விட்டார்.

தனது மகளுக்காகவே நடிகர் கமல்ஹாசனை விட்டு பிரிந்து சென்றதாக ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.அது மட்டும் இல்லை 31ஆவது வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இவ்வாறு பல தடைகளை தாண்டி தற்போதும் சாதித்துதான் வருகின்றார்.

தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகின்றார்.இதேவேளை, அவர் தனிமையில் இருக்கும் சோகம் கண்ணில் தெரிந்தாலும் அதை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு தற்போது மகளுக்காக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.