கடற்கரையில் சடலமாக கிடந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகன்!!

725

பிரபல மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கோபால் ரெட்டியின் மகன் பார்கவ் கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் கோபால் ரெட்டி. இவர் மகன் பார்கவ் (45).கோபால் ரெட்டி பார்கவ் ஆர்ட்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். ரெட்டி கடந்த 2008-ல் உயிரிழந்துவிட்டார்.

பார்கவ் இறால் பண்ணை நடத்தி வந்த நிலையில் நெல்லூரில் உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பார்கவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பார்கவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.