மகாராஷ்டிரா மாநிலத்தில் கடல் கன்னி வடிவில் குழந்தை ஒன்று பிறந்தது.ஆனால், இக்குழந்தை பிறந்து 15 நிமிடங்களுக்குள் உயிரிழந்தது.
திக்ஷா கம்பல் எனும் பெண்ணுக்கு 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டியவாறும், கைகள் மீனின் துடுப்புக்களை போல் உடலில் ஒட்டியவாறும் இருந்தது.
இதற்கான காரணம் குறித்து மருத்துவர் கூறியதாவது, சிரேனோமெலியா(Sirenomelia) என்பது ஒரு அரிதான உடல் வளர்ச்சி குறைபாடு ஆகும்.
முதுகுதண்டின் கீழ் பகுதி மற்றும் கால் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக இவ்வகை நோய் ஏற்படுகிறது.இந்த அரிய நோய் தாக்கப்பட்ட குழந்தைகளின் உருவ அமைப்பு மீனின் உருவ அமைப்பை ஒத்தவாறு காணப்படும்.
சிரேனோமெலியா நோய் தாக்கப்பட்டு பிறந்த அந்த குழந்தையின் கைகள் துடுப்புக்ளை போல இருந்தது. உடலின் மேல் பாதி மனிதர்களை போலவும், கீழ் பாதி வித்தியாசமாக பார்க்க மீனின் உடலமைப்புடன் காணப்பட்டது.
அந்த குழந்தையின் கால்பகுதிகள் இணைந்து பாலுறுப்பு மூடியவாறு இருந்த காரணத்தினால் குழந்தையின் பாலினத்தை சரியாக அறியமுடியவில்லை.
குழந்தையின் தாய் நலமுடன் உள்ளார் என பிரசவம் பார்த்த மருத்துவரான சஞ்சய் பன்சோட் தெரிவித்துள்ளார்.