கடவுளின் சாபம் : 12 வயதுக்கு மேல் பெண்களுக்கு வளரும் ஆணுறுப்பு!!

1497

Dominican குடியரசு நாட்டில் இருக்கக்கூடிய பரஹோனா மாகாணத்தில் அமைந்திருக்கிறது லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரம். இந்த நகரத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பருவ வயதை அடைந்தததும் பன்னிரெண்டு வயதிற்கு பிறகு இந்த பெண் குழந்தைகள் எல்லாம் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்கள்.

இதற்காக இவர்கள் சிகிச்சையோ, அல்லது மருந்து மாத்திரைகளோ எடுத்துக் கொள்வதே கிடையாது. இயற்கையாகவே பருவமடைந்ததும் இந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்கள்.

இப்படி பன்னிரெண்டு வயதில் ஆணாக மாறுகிறவர்களை guevedoches என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பருவ வயதை அடைந்தவுடன் பெண் பிறப்புறுப்பிலிருந்து ஆண் பிறப்புறுப்பு மாறும்.
இதனை கடவுள் விட்ட சாபம், இதனால்தான் இப்படி ஏற்படுகிறது என இந்த மக்கள் நம்பி வருகிறார்கள்.

ஆனால், சத்து குறைபாட்டால் இவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது என கண்டுபிடித்துள்ளார் கார்னெல் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஜூலியானா இம்பெர்டோ ஜின்லி என்ற மருத்துவர்.

அங்கிருப்பவர்களுக்கு என்சைம் 5 அல்ஃபா ரெடுக்டேஸ் (Enzyme 5 alpha reductase) என்ற சத்து இல்லை என்று தெரியவருகிறது. இவை தான் டெஸ்ட்டோஸ்டிரோனை (Testosterone), டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனாக (Dihydrotestosterone) மாற்றுகிறது. இந்த குறைபாடு இங்கிருக்கும் மக்களுக்கு மரபணு ரீதியாகவே தொடர்ந்து வருவதை கண்டுபிடித்தார்

அதனால் தான் XY குரோமோசோமுடன் பிறக்கும் குழந்தைக்கு போதுமான அளவு ஹார்மோன் கிடைக்காததால் பிறக்கும் போது அதன் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. பார்ப்பவர்கள் ஆணுறுப்பு இல்லை என்றதும் பெண் குழந்தை என்று சொல்லிவிடுகிறார்கள்.

பருவ வயதினை அடையும் போது அவர்களது உடலில் கூடுதலாக டெஸ்டோஸ்டிரோன் சுரக்கும். இதன் போது ஆண் குழந்தைகளின் பருவமடைந்ததற்கான அடையாளங்களாக மீசை வளர்வது, குரல் உடைவது ஆகியவை அந்த நேரத்தில் ஆணுறுப்பு வளர்ச்சிக்கான ஹார்மோன் கிடைக்கப்பெற்று ஆணுறுப்பு வளர்ச்சி அடைகிறது.