கடவுளே என் அப்பா சீக்கிரம் நாடு திரும்பவேண்டும் : ஒரு குழந்தையின் பிரார்த்தனை!!

516

குழந்தையின் பிரார்த்தனை..

இந்தியா சென்றுள்ள தன் தந்தை சீக்கிரம் நாடு திரும்பவேண்டும் என தினமும் அப்பாவின் புகைப்படம் முன் நின்று பிரார்த்தனை செய்கிறாள் ஒரு கனேடிய குழந்தை.

கால்கரியில் வாழும் Suruchi Jaitleyயின் கணவரான Divesh, ஒரு அவசர வேலையாக இந்தியாவுக்கு சென்றார். ஏப்ரலில் புதுடில்லிக்குச் சென்ற அவர், மீண்டும் கனடா திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கிறார் Suruchi.

முதலில், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இந்தியாவிலிருந்து கனடாவுக்கு விமான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சரான Omar Alghabra, அந்த தடை ஆகத்து மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆக, இரண்டரை மாதங்களாக கனடா திரும்பமுடியாமல் Divesh தடுமாறிக்கொண்டிருக்க, கனடாவில் Diveshஇன் மனைவி Suruchi, உடல் நலமில்லாத தன் தாய், மற்றும் மூன்று குழந்தைகளுடன் தவித்து வருகிறார்.

தனியாக, அலுவலக வேலை, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலை, உடல் நலமில்லாத தாயை கவனிப்பது என எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் Suruchi.

கணவர் இல்லாமல் தனியாக சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறும் Suruchi, பண ரீதியாகவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் தான் அவதியுற்று வருவதாகத் தெரிவிக்கிறார்.

அப்பா அருகில் இல்லாமல் குழந்தைகள் ஏங்கிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கும் Suruchi, தனது கடைக்குட்டி மகள் தினமும் அப்பாவின் புகைப்படம் முன்னால் போய் நின்றுகொண்டு, கடவுளே என் அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடவேண்டும் என பிரார்த்தனை செய்வதைப் பார்ப்பதற்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.

கனடா அரசு, தன் குடிமக்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காவது ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார் அவர்.