கடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராம மக்கள்: சுவாரஸ்ய சம்பவம்!!

1073

இந்தோனேசியாவில் வனக்காவலர் ஒருவருக்கும் பிரம்மாண்ட மலைப்பாம்புக்கும் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்ட பாம்ப்பை குறித்த கிராம மக்கள் வறுத்து சாப்பிட்டுள்ளனர்.

சுமத்ராவின் பட்டங் கன்சால் மாவட்டத்தில் உள்ள பாமாயில் தோட்ட சாலையில், குறித்த மிகப்பெரிய மலைப்பாம்பை வனக்காவலர் ஒருவர் பார்த்துள்ளார்.

சுமார் 26 அடி நீளம் கொண்ட அந்த பாம்பை உயிருடன் பிடிக்க குறித்த பாதுகாவலர் முயன்றுள்ளார்.

ஆனால் பாம்பு அவரை தாக்கியுள்ளது. இதனையடுத்து சில கிராம மக்கள் உதவியுடன் வனக்காவலரும் அதை திருப்பி தாக்கியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் வனக்காவலர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இறந்த பாம்பை குறித்த கிராம மக்கள் துண்டு துண்டாக வெட்டி தொங்க விட்டனர்.

குறித்த பாம்பானது அந்த கிராம மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகவும், சாலையை கடக்க பொதுமக்கள் அஞ்சியதாகவும், இதனாலையே அந்த பாம்பை தாம் பிடிக்க முயன்றதாகவும் குறித்த வனக்காவலர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாம்பானது கிராம மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதை அவர்கள் வறுத்து சாப்பிட்டுள்ளனர்.

மொத்த கிராமத்திற்குமே அச்சுறுத்தலாக இருந்த பாம்பை வனக்காவலர் ஒருவர் உதவியுடன் கொன்று அதை அந்த மக்கள் வறுத்தும் சாப்பிட்டுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.