கடிதத்தால் பிரச்சனையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!!

1007

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது என்ற செய்தி அவ்வப்போது பாலிவுட்டில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமிதாப்பச்சனின் முன்னாள் காதலி என கூறப்படும் என நடிகை ரேகா, ஐஸ்வர்யா ராய்க்கு பாசமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஏற்கனவே, ஜெயாவுக்கும், ரேகாவுக்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிற நிலையில், ரேகா எழுதிய இந்த கடிதம் அவர்கள் குடும்பத்தில் சற்று பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா பொது நிகழ்ச்சிகளில் ரேகாவை பார்த்தால் அம்மா என்று அன்பாக அழைத்து ஆசி பெறுவார். மாமியாருக்கு ரேகாவை பிடிக்காது என்று தெரிந்தும் ஐஸ்வர்யா அவருடன் இணக்கமாக நடந்துகொள்கிறார் என கூறப்படுகிறது.