ரஷ்யாவை சேர்ந்த இளம் மில்லியனர் தனது வீட்டிலிருந்து அதிகமான பணத்தினை கொள்ளையர்கள் திருடிசென்ற காரணத்தால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.
Blogger Pavel Nyashin (23) என்ற இளம்வயது நபர் பிட்காயின்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் இவருக்கு கிடைத்த வருவாயால் அதிக சொத்துக்களை சேர்ந்ததுள்ள இவர் ரஷ்யாவின் இளம் மில்லியனாவார்.
இவர், தான் சேர்த்துள்ள சொத்துக்கள் நினைத்து பெருமைப்படுவதாகவும், கடின உழைப்பால் இது வந்தது என கூறி, கையில் பணக்கட்டினை வைத்துக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோவே, இவரது வாழ்க்கைக்கு ஆபத்தாக வந்துவிட்டது. இதன் மூலம் இவரது சொத்துக்களை திருடர்கள் ஒன்லைனில் நோட்டமிட்டு, இவரை பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள்.
ஜனவரி மாதம், சாண்டா வேடத்தில் இவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 233,600 பவுண்ட்ஸ் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் £51,551 பவுண்ட்ஸ் பணத்தினை திருடி சென்றுள்ளனர்.
மொத்தம், 280,000 பவுண்டினை இழந்துள்ளார். மேலும் இவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தனது சொத்துக்களை இழந்துவிட்டதால் Pavel மனமுடைந்துபோனார். தான் இழந்த சொத்துக்களை இனி தன்னால் சம்பாதிக்க இயலாது என நம்பிக்கையிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடந்த சம்பவத்தில் இருந்து மீளாத இவர் நேற்று தற்காலை செய்துகொண்டார்.