கணவனின் நண்பன் மீது ஏற்பட்ட காதல்….மனைவியின் விபரீத செயலால் சின்ன பின்னமான குடும்பம்!

568

சென்னையில் கணவனை கொலை செய்து விட்டு குடிபோதையில் இறந்ததாக நாடகமாடிய மனைவியை அவரது ஆண் நண்பருடன் போலீசார் கைது செய்துள்ளனர்சென்னை கிழக்கு அண்ணா நகர் நேரு தெருவை சேர்ந்தவர் கோபி, டிராவ்ல்ஸ் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

திங்கட் கிழமை இரவு குடிபோதையில் வந்த கோபி, காலையில் வீட்டின் மொட்டை மாடியில் மூர்ச்சையற்றுக் கிடந்தார். கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடிக்கும் பழக்கத்தினால் கோபி உயிரிழந்ததாக அவரது மனைவி சுமித்ரா உறவினர்களுக்கு தகவல் சொல்லியுள்ளார். இதனிடையே பிரேத பரிசோதனையின் போது, கோபியின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்த டி.பி.சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மனைவி சுமித்ரா அவரது ஆண் நண்பர் கலைசெல்வனுடன் சேர்ந்த இந்த கொலையை அரங்கேற்றி வந்துள்ளார் என்பதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்.

கொலையான கோபி சுமித்ராவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கோபியின் நண்பரான கலைசெல்வனுடன் சுமித்ராவிற்கு உருவான தொடர்பை கோபி பலமுறை கண்டித்ததோடு கடந்த ஆண்டு இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

அதிலிருந்தே, கோபி குடித்து விட்டு வந்து சுமித்ராவை அடித்து துன்புறுத்துவார் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமித்ரா தனது கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று கோபியை அழைத்து சென்ற கலைச்செல்வன் மது வாங்கி கொடுத்து தள்ளாடும் நிலையில் அழைத்து வந்துள்ளார். வீட்டின் மொட்டை மாடிக்கு அவரைக் கொண்டு சுமித்ராவும் கலைசெல்வனும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

சுமித்ராவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் கொலை திட்டத்தை அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிவித்துள்ள காவல் துறையினர், இது போன்ற குடும்ப விவகாரங்களில் கொலை தான் தீர்வு என தவறான முடிவெடுத்து காவல்துறையிடம் சிக்கிக் கொள்கின்றனர் என்கின்றனர்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பிரிந்து செல்ல சட்டத்தில் எத்தனையோ வழி இருந்தும், கணவனையோ மனைவியையோ கொலை செய்துவிட்டு நிம்மதியாக வாழலாம் என்ற தவறான முடிவால் குடும்பம் சிதைந்து குழந்தைகளின் எதிர்கலாம் தான் கேள்விகுறியாகிறது என்பதையும் காவல் துறையினர்