கணவனுக்கு கோவில் கட்டி பூஜை செய்து வரும் மனைவி: நெகிழ்ச்சி சம்பவம்!!

422

ரெட்டி…

பெண் ஒருவர் தன் கணவருக்கு கோயில் கட்டி அவரது உருவச் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் அங்கி ரெட்டி – பத்மாவதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

திடீரென விபத்து ஒன்றில் ரெட்டி உயிரிழந்துவிட்டார். அவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மாவதி. 4 வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்து விட்டாலும் இன்னமும் அதே நினைவுடன் வாழ்ந்து வந்தார் பத்மாவதி. கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்மாவதியின் கனவில் வந்த அங்கிரெட்டி, தனக்கு கோயில் கட்டி வழிபடுமாறு கேட்டுள்ளார்.

இதனால் பத்மாவதி, கணவருக்கு கோயில் கட்டி வழிபட முடிவு செய்தார். அதன்படியே கணவருக்கு கோயில் கட்டி கோயிலின் உள்ளே அவரது உருவச் சிலையை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்.

கணவரின் பிறந்த நாள் மற்றும் பவுர்ணமி அன்றும் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்து வரும் இவரை செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.