கணவனை கொன்று உடலை பள்ளத்தில் வீசிய மனைவி : அரங்கேறிய திகில் சம்பவம்!!

267

மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற போலிஸார் அந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த நபர் கோபட் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பஞ்சால் என்பது தெரியவந்தது. மேலும் இவரது மனைவி ஷீத்தலுக்கு, நரேஷ் போதானி என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது.

இதை அறிந்த அவரது கணவர் மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த நபருடன் பழகிவந்துள்ளார். இதையடுத்து கணவனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

பிறகு நரேஷ் போதானி தனது நண்பர்களான அஜய் மாதேரா, சதீஷ் ஹவ்சரே, ராகேஷ் ஆகியோருடன் சேர்ந்து தினேஷ் பஞ்சாலை கொலை செய்து உடலை வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் மனைவி ஷீத்தல், நரேஷ் போதானி மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் உட்பட ஐந்து பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.