விழுப்புரம்….
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சந்தோஷ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சுரேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இத்தம்பதிக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தோஷ் குடித்துவிட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் குழந்தைகள் இருவரையும் சுரேகா தனது தாய் வீட்டில் விட்டுள்ளார். தற்போது சுரேகா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்தநிலையில் மனைவியின் நடத்தையில் கணவர் சந்தோஷ் சந்தேகப்பட்டதாகவும் இதனால் கருவை கலைக்க அவர் தனது மனைவியிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுள்ளது.
இந்தநிலையில் நேற்று சந்தோஷ் மதுஅருந்தி விட்டு தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு சுரேகாவை சந்தோஷ் குத்த முயன்றுள்ளார்.
சுதாரித்து கொண்ட சுரேகா, கத்தியை பறித்து கணவர் சந்தோஷின் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து நடந்த சம்பவத்தை சுரேகா அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தடையவியல் நிபுனர்கள் தடையங்களை சேகரித்த பின்னர்.
பிரேத பரிசோதனைக்காக சந்தோஷின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கர்ப்பத்தை கலைக்கச்சொன்ன கனவரை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.