கணவரை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கிய காவலர் : பேஸ்புக் பழக்கத்தால் ஏற்பட்ட பரிதாபம்!!

326

சென்னை..

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் அடுத்த காரணை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவருக்கு 27 வயதாகிறது. ஷோபனாவுக்கு திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தனது ஆறு வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஷோபனாவுக்கு முகநூலில் விக்னேஷ்வர் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலித்துள்ளனர்.

விக்னேஷ்வர் சென்னை புழல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில், ஷோபனாவின் பின்புலம் தெரிந்துகொண்டுதான் காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன், மனைவி போல நெருங்கி பழகியுள்ளனர்.

இதனால் ஷோபனா கர்ப்பமாகி உள்ளார். விக்னேஷ்வரால் கர்ப்பமடைந்த ஷோபனா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு விக்னேஸ்வரிடம் கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ்வர் இசைவு கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் கட்டாயப்படுத்தி கருவை கலைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஷோபனா தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறவே அதிர்ச்சியடைந்த விக்னேஷ்வர் ஷோபனாவின் வீட்டிலேயே வைத்து அவருக்கு தாலி காட்டியுள்ளார். சில நாட்கள் ஷோபானாவுடன் வாழ்ந்து வந்த விக்னேஷ்வர் ‘ இனி உன்னுடன் வாழ முடியாது ‘ எனக்கூறி பிரிந்து சென்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த ஷோபனா செங்கல்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் காவலர் விக்னேஷ்வர் மீது புகார் கொடுத்துள்ளார். அப்போது விகேன்ஸவரை நேரில் வரவழைத்த போலீசார் ஷோபனாவை திருமணம் செய்துகொள்ள்ளுமாறு கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் அதற்கு மறுத்துள்ளார். பின்னர் அந்த புகாரை சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த வழக்கு மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அங்கேயும் விக்னேஸ்வரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் காவல் ஆணையரிடம் புகாரை கொடுத்துள்ளார்.

அந்த வழக்கு தற்போது தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் மாற்றப்பட்டுள்ள நிலையில் புகார் மீது இன்னும் சரிவர விசாரணை தொடங்கப்படவில்லை என்று ஷோபனா செய்தியாளர்களிடம் உருக்கமாக பேட்டி கொடுத்துள்ளார்.