கண்ணெதிரே கண்ட ஒரு காட்சியால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!!

408

தமிழகம்…

தமிழகத்தில் ஓடும் இரயிலில் தந்தை அ.டிவாங்கும் காட்சியை கண்டு அ.தி.ர்ச்சியில் கீழே சுருண்டு வி.ழுந்து இ.ளம்பெண் உ.யிரிழந்த ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு 3 வயதில் உமேஸ்பவின் என்கிற மகன் உள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த தனது தங்கையை மறுவீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஸ்வரி தனது தந்தை அண்ணாமலை, தாய் கல்யாணி ஆகியோருடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து நேற்று மாலை 4 மணி அளவில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தார்.

அந்த ரயில் செங்கல்பட்டு வந்ததும், அந்த பெட்டியில் 4 பேர் ஏறினர். அதில் ஒருவர் தனக்கு ஒ.துக்கப்பட்ட மேல் இருக்கையில் அமராமல், மகேஸ்வரி தந்தை அண்ணாமலை இருந்த கீழ் இருக்கைக்கு அருகில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அந்த ரயில் விழுப்புரம் வந்ததும், அந்த மேல் இருக்கைக்கு அவருடன் வந்த 3 பேரில் ஒருவர் சென்று படுத்தார். இதை பார்த்த அண்ணாமலை உங்கள் இருக்கையில் உங்களுடன் வந்த நபர் ஏறி விட்டார். ஆகவே எனது இருக்கையை விட்டு எழுந்து செல்லுங்கள். நாங்கள் சாப்பிட போகிறோம் என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த நபர் செல்ல முடியாது என்று அண்ணாமலையிடம் த.கராறு செ.ய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வா.க்குவாதம் முற்றியது. இதை பார்த்த மகேஸ்வரி, அந்த நபரை தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது அந்த நபர், அண்ணாமலையை தா.க்க தொடங்கியதாக தெரிகிறது. இதை பார்த்து அ.திர்ச்சியடைந்த மகேஸ்வரி தி.டீரென ம.யங்கி கீழே விழுந்தார். அவரை அண்ணாமலை, அவரது தாய் கல்யாணி எழுப்பினர். ஆனால் அவர் மூச்சு, பேச்சு இல்லாமல் இருந்தார்.

இதையடுத்து இரயில் டிக்கெட் பரிசோதகர் உதவியுடன் ஏற்கனவே தயாராக இருந்த ஆம்புலன்சில் மகேஸ்வரியை ஏற்றி சிகிச்சைக்காக கடலூர் அ.ரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செ.ய்த மருத்துவர்கள்,மகேஸ்வரி ஏற்கனவே இ.றந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அண்ணாமலை, இவரது ம.னைவி கல்யாணி ஆகிய 2 பேரும் க.தறி அழுதனர்.

இந்த ச.ம்பவம் தொடர்பாக பொ.லிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.