திருச்சி…
திருச்சி மாவட்டத்தில் உள்ள திண்ணகுளம் கிராமத்தில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஜான்சி ராணி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ஜான்சிராணி கதவை தட்டியுள்ளார்.
ஆனாலும் பீட்டர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஜான்சிராணி அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீட்டர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜான்சிராணி கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பீட்டரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.