கன மழை… சேற்றில் சிக்கிய இளைஞர்: தேடிச் சென்றவர்கள் கண்ட பரிதாப காட்சி!!

246

இந்திய………………

இந்திய மாநிலம் கேரளாவில் கன மழையை தொடர்ந்து இரவில் சேற்றில் சிக்கிய இளைஞர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல்கைமா மாகாணத்தில் சாரதியாக பணியாற்றி வருபவர் 34 வயதான சுனு ஜார்ஜ். 20 நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக கேரளா திரும்பிய சுனு ஜார்ஜ்,

அரசாங்கம் வலியுறுத்தியுள்ள தனிமைப்படுத்துதல் நாட்களை முடித்துக் கொண்டு, மனைவியின் குடியிருப்பு அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டம் சென்னித்தலா பகுதிக்கு சென்றுள்ளார்.

இரவு சுமார் 8.30 மணியளவில் நன்கு அறிமுகமில்லாத பகுதியில் தனியாக நடந்து சென்ற அவர் கால் தடுமாறி வயல்வெளியில் விழுந்துள்ளார்.

ஏற்கனவே கன மழை காரணமாக அப்பகுதி முழுவதும் சேறாக மாறிப்போயிருந்துள்ளது. இந்த நிலையில் சேற்றில் சிக்கிய அவர், அதில் இருந்து மீண்டு வர முடியாமல் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இரவு வெகு நேரம் கடந்தும் சுனு குடியிருப்புக்கு திரும்பாபத நிலையில், மனைவி ஷேர்லி மற்றும் உறவினர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். இதில் ஒரு குழுவினர், சேற்றில் சிக்கி சுனு இறந்து கிடப்பதை கண்டறிந்து உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.