கன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய அதிர்ச்சியூட்டும் வரலாற்று தகவல்கள்!

1221

பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள்.

உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.கன்னி என்பதற்கு ஆங்கிலத்தில் ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் ‘வர்கோ’ என்ற வார்த்தையிலிருந்து ‘வர்ஜின்’ வந்தது. யாரோடும் சேர்ந்திருக்காமல் தன் சொந்தக் காலில் நிற்கும் சக்திவாய்ந்த பெண்’ என்பது தான் இந்த வார்த்தையின் அர்த்தம்.

ஆர்டெமிஸ், ஹெஸ்டியா ஆகிய இரண்டு கிரேக்கப் பெண் தெய்வங்கள் வர்ஜின்களாகக் கருதப்பட்டன. ஆர்டெமிஸ் வேட்டைக்கான தெய்வம். ஹெஸ்டியா உடல் நலத்தைக் காக்கும் தெய்வம்.

கொடிய மிருகங்களை வேட்டையாடவும், பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும் சக்தி தேவை. அந்த சக்தி இரண்டு பெண் தெய்வங்களிடமும் இருந்தது. அது மட்டுமில்லை கிரேக்க ஆண் தெய்வங்களில் பலர் முரட்டுத்தனமானவர்கள்.

ஒரே ஆண் தெய்வம், பல பெண் தெய்வங்களை ஏமாற்றியோ மிரட்டியோ உறவு வைத்துக்கொண்டு, பிறகு மனைவியாக்கிக் கொண்டதாகப் புராணங்களில் இருக்கிறது.

இத்தனை முரட்டு தெய்வங்களையும் சமாளித்து ஆர்டெமிஸம், ஹெஸ்டியாவும் தனியாக இருந்தனர். இந்த சக்தியும், சுயேச்சையான தன்மையும்தான் ‘வர்ஜின்’ என்பதன் அடையாளம்.

காலப்போக்கில் மத நம்பிக்கைகள் ‘வர்ஜின்’ என்பதைக் கன்னித்தன்மையின் அடையாளமாக மாற்றிவிட்டன.