கமல்ஹாசனை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை சிம்ரன்: பிளாஷ்பேக்!!

577

1990 களில் தனது நடிப்பு மற்றும் அழகிய நடனத்தால் கனவுக்கன்னியாக இருந்த நடிகை சிம்ரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த சிம்ரன், நடிகர் அப்பாஸ் சிம்ரன் காதல், ராஜூசுந்தரம் சிம்ரன் காதல்,கமல்ஹாசன் சிம்ரன் ரகசிய கல்யாணம் என பல்வேறு கிசுகிசுக்களுக்கு ஆளானார்.

ஆனால், அதற்கெல்லாம் இவரே விளக்கம் அளித்திருந்தார். அதுகுறித்த பிளாஷ்பேக் இதோ, இதில் அப்பாஸ் எனது நல்ல நண்பர். இருவரும் பெங்களூரில் மாடலிங் செய்தோம். ராஜூவுடன் காதல் ஏற்பட்டதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நண்பர்களால் பிரிந்துவிட்டோம்.

கமல்சார் என் மரியாதைக்குரியவர். அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும் போது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். அதனால் என்னையும் அவரையும் இணைத்து பேசியிருக்கலாம்.

ஆனால், என்னுடைய காதல் உண்மையானது எனது சிறுவயது தோழன் தீபக்குடன்தான். நான் தீபக்கை கல்யாணம் செய்துகொள்வேன் என்று நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது. பெரியவர்கள் சொல்வது போல இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட பந்தம்.

எனக்கும் டான்ஸ்மாஸ்டர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விஷயங்களை அவன் கேள்விப்பட்டு ஒரு நாள் என்னிடமே நேரில் கேட்டான், “நீ தமிழ் நாட்டு மருமகள் ஆகப்போகிறாயாமே’ என்றான். நான் ஆமாம் என்றேன். காரணம் அப்போதெல்லாம் தீபக் என்னோட விளையாட்டுதோழன். நல்ல நண்பன் என்ற உணர்வு மட்டும்தான் இருந்தது. அவனுக்கும்தான்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் தங்கை மோனலின் மரணமும் என்னை ரொம்பவே பாதித்தது. இன்னும் சொல்ல முடியாத பல விஷயங்கள் பாதித்தன. மேலும் இதே சூழ்நிலையில் சென்னையில் தொடர்ந்து இருக்கப்பிடிக்கவில்லை.

இதனால், சென்னையை விட்டு ஒதுங்கியிருக்க முடிவு செய்தேன். நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்தேன். இதை அம்மா அப்பாவிடம் சொன்னதும் அவர்களும் அந்த முடிவை ஆதரித்தார்கள், “”போதும் டீ. ராஜாத்தி இதுவரை சினிமாவில் நடித்து பணம், புகழ் எல்லாம் சம்பாதித்தாகிவிட்டது.

இனி உனக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நிம்மதியாய் இரு” என்றார்கள். அவர்களின் வார்த்தைகளில் அன்பும், தடவிக்கொடுத்த சிநேகமும் என்னை புத்துணர்ச்சி கொள்ள வைத்தது.

அப்போதுதான் என் அப்பா தீபக்கை பற்றி கேட்டார். என் வாழ்க்கையில் நல்லது நடந்தபோதெல்லாம் ஓடி வந்து வாழ்த்தி மகிழ்ந்தவன் தீபக்தான் என்று மனதில் உள்ளதைச் சொன்னேன். கணவர் நண்பராகவும், இருந்தால் ஒரு பெரிய பிளஸ், நம்மை முழுமையாக புரிந்து கொள்வார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான்.’