கருணை கொலை செய்யும் படி இளம் பெண் மனு : நெஞ்சை உருக்கும் காரணம்!!

343

சேலம்…

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் தன்னை கருணை கொலை செய்து விடும் படி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில், இருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று(27.12.2021) நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

அப்போது அவரிடம் அங்கிருந்த பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக கொடுத்தனர். அதன் படி, மேட்டூர் வெள்ளார் பகுதியை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இவர் கொடுத்துள்ள மனுவில், சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 40 நாட்களிலே என்னுடைய கணவர் பிரிந்துவிட்டார்.

அதன் பின் கணவரைப் பற்றி விசாரித்த போது, என் கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

என்னை ஏமாற்றி திருமணம் செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் என்னை கருணைக்கொலை செய்து விடுங்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.