கர்ப்பிணி மருத்துவரை தொடர்ந்து பெண் செவிலியரிற்கு நடந்த விபரீதம் !! பறி தவிக்கும் குடும்பம்!!

298

வேலூரில்………

வேலூரில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கொரோனாவால் ப.லி.யா.கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே அரும்பணியாற்றி வரும் முன்களப்பணியாளர்களின் இழப்பு செய்திகள் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மற்றுமொரு பெண் செவிலியரை மருத்துவத்துறை இழந்துள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (47) என்பவரது மனைவி எழிலரசி (40). இவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு சில நாட்கள் முன்பு கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் கொரோனா சோதனை எடுத்துக்கொண்டார். அதில் எழிலரசிக்கு தொற்று உறுதியானது.

அதனை தொடர்ந்து எழிலரசி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோ.ச.மானதால் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எழிலரசி இன்று உயிரிழந்தார். இதேபோல, திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திகா என்ற 8 மாத கர்ப்பிணியான பெண் மருத்துவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.