கலக்கப்போவது யாரு ரக்‌ஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா!!

1219

இப்போது தான் சின்னத்திரை பிரபலங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. முகம் காட்டி கொஞ்சம் இடம் பிடித்தால் போதும் அடுத்து என்ன? ஓஹோ பிரபலம் தான்.

கலக்கப்போவது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பவர் ரக்‌ஷன். சில நேரங்களில் இவரும் போட்டியாளர் போல ஸ்டாண்டப் காமெடி செய்கிறார். அதே வேளையில் பலரும் இவரை கலாய்க்க தயங்குவதில்லை.

இருந்தாலும் அவரும் அதை சமாளித்து கவுண்டர் கொடுத்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் பல டிவி சானல்களுக்கு வேலை தேடி விசிட் அடித்திருக்கிறார். பின் தெரிந்த ஒருவர் மூலம் சினிமாவில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

அவரும் காசு வாங்கிக்கொண்டு ஹீரோவாக்கி விடுகிறேன் என ஷூட்டிங் நடத்தினாராம். ரக்‌ஷனும் நகைகளை அடகு வைத்து காசு கொடுத்துவிட்டாராம். சில நாட்கள் கழித்து மீண்டும் காசு கேட்க ரக்‌ஷன் ஒதுங்கிவிட்டாராம்.

இப்படியே ரூ 10 லட்சத்தை இழந்து விட்டதாக அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.