கல்யாண வயசு பாடல் காபியா? அனிருத் தரப்பு கொடுத்த விளக்கம் – மீண்டும் வறுத்தெடுக்க துவங்கிய ரசிகர்கள்!!

585

நயன்தாராவிடம் காமெடியன் யோகி பாபு காதலை சொல்வது போல கோலமாவு கோகிலா படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கல்யாண வயசு பாடல் செம ஹிட் ஆனது. ஆனால் கூடவே பெரிய சர்ச்சையில் அது சிக்கிவிட்டது.

ஒரு ஆங்கில பாடலின் அப்பட்டமான காபி இது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இது பற்றி தற்போது படக்குழு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆங்கில பாடலின் லூப் மற்றும் பீட் ஆகியவற்றை நாங்கள் அனுமதி பெற்றுத்தான் வாங்கி பயன்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளனர்.

இந்த பதிலும் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. “அனிருத் மியூசிக் காம்போசர் இல்லை, மற்றவர்களிடம் வாங்கி வெளியிடுபவர்” என சமூக வலைத்தளத்தில் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.