கல்யாணம் பண்ணி மூணு குழந்தை பெத்துட்டாரு.. ஷான் நிகம்-ஐ கலாய்த்த ஐஸ்வர்யா தத்தா!!

112

ஐஸ்வர்யா தத்தா..

மேடை நடன கலைஞராக ஆரம்பித்து பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடலாகினார். பின் பாயும்புலி, ஆறாது சினம், சத்திரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு முரட்டு போட்டியாளராக விளையாடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். கோபமாக முகபாவனையை வைத்து மிரட்டிய ஐஸ்வர்யா தத்தா, முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் காஃபி வித் காதல், ஜாஸ்பர், இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, மெட்ராஸ்காரன் படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார். இந்த படம் என்னுடைய 27வது படம். ஆனால் சில படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. தினமும் எந்திரிக்கும் போது நல்ல கதை கேட்போம் என்று நினைப்பேன்.

கொரானா காலத்தில் இந்த கதை பண்ண கேட்டார் இயக்குனர் வாளி. படம் முடித்து பார்க்கும் போது நல்லா இருந்தது, ஆனால் ரிலீஸ் ஆகவில்லை. காத்திருந்த பின், இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஷ், என் நெருங்கிய நண்பர் இந்த கதையை சொன்னார். தயாரிப்பாளரை எனக்கு 6, 7 வருஷமாக தெரியும்.

இந்த படத்திற்கு முன், அவர் சிறந்த மனிதர் என்று கூறியதுடன் Flying கிஸ் கொடுத்தார். என்ன பண்ணுறது கல்யாணம் பண்ணிட்டு மூணு குழந்தை பெத்துட்டாரு என்று பேசியிருக்கிறார். என் வாழ்க்கையில் பிரச்சனை இருந்தாலும் ஜெயதீஷிடம் தான் சொல்லுவேன் என்று நகைச்சுவையுடன் பேசி அரங்கையே சிரிப்பில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.