கல்வி மீது கொண்ட காதல்.. ஒற்றைக்காலுடன் 2 கி.மீ. சென்று படிக்கும் சிறுமி : வைரலாகும் வீடியோ!!

585

பீகார்….

பீகார் மாநிலம் சிவான் என்ற பகுதியை சேர்ந்தவர் பிரியன்சு குமாரி. 11 வயதாகும் இவருக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது. இருப்பினும் அவரை கைவிடாத அவரது பெற்றோர்கள், அவருக்கு அளித்த ஊக்கத்தால் ஒற்றைக்காலிலே துள்ளித்துள்ளி குதித்தபடியே நடக்கப் பழகியுள்ளார்.

உடற்குறைபாடு இருந்தாலும் தனது பெற்றோர்களால் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக இந்த சிறுமி, பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

சுமார் 2 கிலோ மீட்டர் வரை, அவரது ஒற்றைக்காலிலே தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். தனக்கு கால் இல்லாததால், இந்த சிறுமி படித்து ஒரு மருத்துவராகி சேவை செய்ய வேண்டுமென்று இலட்சியம் கொண்டுள்ளார்.

இருப்பினும் இவரை கவனிக்காத அம்மாநில அரசு, எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று அந்த சிறுமி கூறியுள்ளார். இது குறித்து அந்த சிறுமி பேசுகையில், “பிறந்ததிலிருந்தே நான் இப்படித்தான் இருக்கிறேன். அதற்காக என் கனவுகளை அடையாமல் விடமாட்டேன்.

என் கனவை நோக்கி நான் செல்ல, எனக்கு செயற்கை காலொன்று தேவைப்படுகின்றது. அரசு அதற்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை அரசுக்கு வைத்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து மாணவிக்கு மாநில அரசு உதவி முன்வர வேண்டும் என பலரும் சமூகவலைதளத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.