சென்னை….
மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர் லோகநாதன் இதுகுறித்த மனைவியுடன் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
அப்போது உமாமகேஸ்வரிக்கும் காவலர் லட்சுமி பகுதிக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று கணவன் லோகநாதன் மனைவி உமா மகேஸ்வரி மூலம் காவலர் லட்சுமி பதியை வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது.
கள்ளக் காதலியை சந்திக்க வந்த காவலரை அந்தப் பெண்ணின் கணவர் மண்டை உடைத்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் அந்த பெண்ணையும், கணவரையும் கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் நாளேடுகளை திருப்பினால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்திகளை நிரம்பியுள்ளன. இதற்கு இணையாக கள்ளக்காதல் அதனால் நடந்த கொலைகள் போன்ற செய்திகளும் அதிக அளவில் உள்ளன. ஒரு நடுத்தர வயது பெண் கொலை செய்யப்பட்டால் உடனே அதன் பின்னணியில் கள்ளக்காதல் இருக்கக் கூடும் என்ற நோக்கத்தில் போலீசார் ஆராயும் அளவிற்கு கள்ளக்காதல் சமூகத்தில் தலைதூக்க தொடங்கியுள்ளது.
மாறிவரும் கலாச்சாரம், ஒழுக்கமின்மையே இதற்கு மூல காரணமாக சொல்லப்படுகிறது.
மாமியார், மருமகனுடன் கள்ளக்காதல், மைத்துனன் அண்ணியுடன் கள்ளக்காதல், மாமா மச்சான் மனைவியுடன் கள்ளக் காதல் என அநியாயங்கள் அரங்கேறி வருகின்றன.
இது ஒருபுறமிருக்க மக்களுக்கு முன்மாதிரியாக வாழவேண்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல் துறையைச் சேர்ந்தவர்களே கள்ளக்காதலில் அகப்பட்டு அசிங்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்த வரிசையில் சென்னையில் தலைமைச் செயலக காவல் நிலைய போலீசார் ஒருவர் கள்ளக் காதலியை சந்திக்கச் சென்று அவரின் கணவருடன் சண்டையிட்டு மண்டை உடைந்துவந்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை தலைமைச் செயலக காலனி அடுத்த ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், இவரது மனைவி தலைமைச்செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை பதிவேடு பராமரிப்புப் பிரிவில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.
முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரி கணவரை பிரிந்து பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில் லோகநாதனை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் உமா மகேஸ்வரி தனது சொந்த பிரச்சினை காரணமாக அடிக்கடி தலைமைச் செயலக காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது உமா மகேஸ்வரிக்கும் காவலர் லட்சுமிபதிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது, அடிக்கடி உமாமகேஸ்வரிவுடன் லட்சுமிபதி சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில் உமா மகேஸ்வரிக்கு 4 லட்சம் ரூபாய் வரை அவர் கடன் கொடுத்துள்ளார்.
மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர் லோகநாதன் இதுகுறித்த மனைவியுடன் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது உமாமகேஸ்வரிக்கும் காவலர் லட்சுமி பகுதிக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று கணவன் லோகநாதன் மனைவி உமா மகேஸ்வரி மூலம் காவலர் லட்சுமி பதியை வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது. கள்ள காதலி அழைப்பதால் லட்சுமிபதி உற்சாகமாக உமா மகேஸ்வரி வீட்டுக்கு சென்றார்.
அப்போது தயாராக காத்திருந்த கணவர் லோகநாதனுக்கும் காவலர் லட்சுமி பதிகம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென இருவருக்கும் இடையே கைகலப்பானது, அருகில் இருந்த கல்லை எடுத்து லட்சுமிபதி மண்டையில் தாக்கினார் லோகநாதன்.
இதில் லட்சுமி பதியின் மண்டை உடைந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காவலர் லட்சுமிபதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். கள்ளக் காதலியை சந்திக்க சென்ற இடத்தில் லட்சுமிபதியை கணவன் லோகநாதன் தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லோகநாதன் மற்றும் மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.