தஞ்சாவூர்……
தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரை சேர்ந்தவர் சத்தியசீலன் என்கிற அருண்(31). பட்டதாரி இளைஞரான இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி நந்தினி(24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. சத்தியசீலனின் நண்பர் அதே ஊரை சேர்ந்த பிரகாஷ்(29).
நெருங்கிய நண்பர்களான இருவரும் சவுண்ட் சர்வீஸ் வேலைக்கு சேர்ந்து செல்வது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்தியசீலனின் மனைவி நந்தினிக்கும், பிரகாசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், 2 மாதத்திற்கு முன்பு பிரகாசும், நந்தினியும் கண்டியூரில் இருந்து வெளியேறி சுவாமிமலை அருகே உள்ள அலவந்திபுரம் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு குடும்பம் நடத்தி வந்தனர்.
பிரகாஷின் செயலால் மனம் நொந்து போன நந்தினி தனது கணவர் சத்தியசீலனுக்கு போன் செய்து, தன்னை சேர்த்துகொள்ளுமாறும், என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் இருக்கும் இடத்தையும் சத்தியசீலனிடம் தெரிவித்துள்ளார். பின்னர், கண்டியூர் வந்த சத்தியசீலன் தனக்கு துரோகம் செய்த பிரகாசை கையில் வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதற்கு துணையாக அவரது மனைவி நந்தினியும் இருந்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியசீலன் அவரது மனைவி நந்தினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.