கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க கணவர் எதிர்ப்பு : ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்!!

240

நாமக்கல்….

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை சாலை சண்முகா நகரைச் சேர்ந்தவர் நடராஜன்(52). இவரது மனைவி கிருத்திகா(36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நடராஜன் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று கிருத்திகா பரமத்தியில் உள்ள கடை ஒன்றில் பொருள் வாங்கி விட்டு வருவதாக கணவர் நடராஜனிடம் கூறிவிட்டு சென்றார். வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது திடீரென வீட்டுக்குள் அரிவாளுடன் நுழைந்த மர்ம நபர் நடராஜனை கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த சொட்ட சொட்ட வலி தாங்க முடியாமல் நடராஜன் அலறி துடிதுடித்துள்ளார். நடராஜன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது நடராஜன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அங்கிருந்து ஒரு நபர் தப்பி ஓடுவது தெரியவந்தது. அவனை விரட்டிச்சென்ற அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த நடராஜனை காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

பிடிபட்ட நபர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி, நத்தக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் யோகேஸ்வரன்(29) என்பது தெரியவந்தது. நடராஜனை தீர்த்துக்கட்ட அவரது மனைவி கிருத்திகாவும், கோபால் என்பவரும் சேர்ந்து தன்னை அனுப்பி வைத்ததாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், கிருத்திகாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

எனது வீட்டிற்கு ஜே.சி.பி. மேற்பார்வையாளர் கோபால் அடிக்கடி வந்து செல்வார். இதனால் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தோம். இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கணவர் வீட்டில் இல்லாதபோது இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். இதை அறிந்த கணவர், எங்களை கண்டித்தார். இதன் காரணமாக நடராஜனுக்கும் எனக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

தொடர்ந்து நடராஜன் எங்களது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்து வந்ததால் அவரை தீர்த்துக்கட்ட நானும், கோபாலும் முடிவு செய்தோம் என தெரிவித்தார்.

இதையடுத்து கிருத்திகாவையும், யோகேஷ்வரனையும் பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள கோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.