கள்ளக்காதலனை திருமணம் செய்ய கணவனுக்கு பெண் அரசியல்வாதி செய்த மோசமான செயல்!!

266

கேரளா….

கேரளாவில் கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ்வதற்கு வெளிநாட்டில் உள்ள கணவனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த சிபிஐ(எம்) பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் முழு விவரத்தை பார்க்கலாம்…

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பஞ்சாயத்தின் சிபிஐ(எம்) உறுப்பினராக இருப்பவர் சௌமியா சுனில் (34). இவரது கணவர் சுனில் வர்கீஸ். இவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வேலை பார்த்து வருகிறார். அதேபோல,

இடுக்கி பகுதியைச் சேர்ந்த வினோத் (NRI) என்பவர் சவுதி அரேபியாவில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சவுமியாவுக்கும், வினோத்துக்கும் போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.

வினோத் தனது மனைவியுடன் சவுதியில் வசித்து வருவதால் அடிக்கடி கேரளாவுக்கு வந்து சவுமியாவின் வீட்டில் தங்கி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அதற்கு சவுமியாவின் கணவர் சுனில் தடையாக இருப்பதால் அவரை கொல்ல முடிவு செய்து பின்னர் மாட்டிக்கொள்வோம் என பயந்து வேறு வழியில் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, சுனிலை போதை வழக்கில் சிக்க வைத்துவிட்டால் நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்வோம் என முடிவெடுத்தனர்.

அதற்காக பிப்ரவரி 22ம் தேதி எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷெஃபின் மற்றும் ஷானவாஸ் ஆகியோரிடம் இருந்து ரூ.45,000க்கு போதை மாத்திரைகளை வாங்கி வந்து சுனிலின் பைக்கில் வைத்துள்ளனர். அதன் பின்னர் அடையாளம் குறிப்பிடாமல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுனிலின் பைக்கில் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சுனில் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சுனில் மீது எந்த குற்ற வழக்குகளும் இதுவரை பதிவாகாமல் இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் சுனில் நிரபராதி என்ற முடிவுக்கு வந்த போலீசார், சவுமியாவை விசாரிக்க தொடங்கினர். அப்போது, சவுமியா செல்போனில் வேறொரு வெளிநாட்டு எண்ணிற்கு அடிக்கடி பேசி வந்ததை கண்டுபிடித்தனர். அது வினோத் என்பதையும் உறுதி செய்தனர்.

தொடர்ந்து சவுமியா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சவுமியாவையும், போதை மருந்தை சப்ளை செய்த ஷெஃபின் மற்றும் ஷானவாஸ் ஆகியோரையும் கைது செய்தனர். தலைமைறைவாக உள்ள சவுமியாவின் கள்ளக்காதலன் வினோத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலனை கரம் பிடிக்க கணவனை போதை மருந்து வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த பஞ்சாயத்து பெண் உறுப்பினரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.