ராணிப்பேட்டை….
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வருகிறார்.
மகேஸ்வரி பல்வேறு நபர்களுடன் நெருக்கமான பழக்கம் வைத்திருந்ததாகவும் இதன் காரணமாக மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகேஸ்வரி பக்கத்து கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
தாய் வீட்டுக்கு சென்று வருவதாக சென்ற மகேஸ்வரி வீடு திரும்பாத நிலையில் அவரது கணவர் ஜெய்சங்கர் மற்றும் உறவினர்கள் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் மகேஸ்வரி காணவில்லை என புகார் அளித்திருந்தனர்.
காவல்துறையினர் மற்றும் மகேஸ்வரியின் கணவர் மற்றும் உறவினர்கள் மகேஸ்வரியை தேடி வந்த நிலையில் குக்குந்தி கிராமம் அருகே உள்ள விவசாய கிணற்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடப்பதாக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர் கிணற்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் விழுந்து கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போன மகேஸ்வரி என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மகேஸ்வரியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து காவல் நிலையம் முன்பு ஆற்காடு செய்யாறு செல்லும் சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் குக்குந்தி கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிரபு மகேஸ்வரி இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், சில நாட்களாக மகேஸ்வரி வேறு பல ஆண்களுடன் பழக்கம் வைத்திருப்பதை அறிந்த பிரபு கண்டித்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிரபு மகேஸ்வரியின் தலையில் கல்லை போட்டு, முகத்தை சிதைத்து கிணற்றில் வீசியதாக தெரிவித்திருக்கிறார்.