கனிகா..
2002ஆம் ஆண்டு வெளியான ‘பைவ் ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.
அதன் பின் சில படங்களில் நடித்துவந்த இவர், அஜித்துக்கு ஜோடியாக ‘வரலாறு’ படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
நடிகை கனகா, சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார். அந்த சீரியல் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு பின்னர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு வெக்கேஷன் சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.