ரம்யா பாண்டியான்..
மொட்டை மாடியில் பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி ரசிகர்களிடம் பிரபலமானவர் ரம்யா பாண்டியான். நடிகர் அருண்பாண்டியனின் நெருங்கிய உறவினர் இவர். சினிமாவில் நடிப்பது, மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதையே தனது கேரியராக தேர்ந்தெடுத்தார்.
ஜோக்கர் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. அதைப்பார்த்துவிட்டு சமுத்திரக்கனி தான் நடித்த ஆண் தேவதை படத்தில் ரம்யாவை நடிக்க வைத்தார். அதோடு சரி. அதன்பின் பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை.
அப்போதுதான் மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்கள் அவருக்கு கை கொடுத்தது. அவரே எதிர்பார்த்திராத வகையில் அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இடுப்பழகை பார்த்து இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனாலும், சினிமா வாய்ப்புகள் வரவில்லை.
எனவே, விஜய் டிவி பக்கம் போனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரசிகர்களை கவர ஒன்றும் செய்யவில்லை. அதோடு, அவரின் நடவடிக்கைகளும் அதிருப்தியை கொடுத்தது. எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இப்படியே போனால் வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என கணக்குபோட்ட ரம்யா சினிமாவில் கவர்ச்சி காட்டவும் நான் ரெடி என சொல்வது போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அவரின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.