மும்பை…
பப்ஜி விளையாடி தாயின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன் திடீரென காணாமல் போய் விட்டதாக பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளான்.
இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பொலிசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் முதல் சிறுவன் செல்போனில் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடியதாகவும், இதனால் தாயின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.10 லட்சத்தினை இழந்ததால்,
பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிசார் தீவிர விசாரணை நடத்தியபோது, அந்தேரி கிழக்கு மகாகாளி குகை அருகே சிறுவன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் சிறுவனை கண்டுபிடித்ததோடு, பின்பு சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.