ஈரோடு…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காதலித்த பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்து காதலன் கைவிட்டதால் அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நல்லாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான கலையரசி என்ற பெண், தனியார் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணி செய்து வந்துள்ளார்.
அதே நிறுவனத்தில் பணியாற்றிய முத்துக்குமார் என்பவரும் கலையரசியும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
தொடக்கத்தில் கலையரசியின் சாதி குறித்து அறிந்த முத்துக்குமார், விலகத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கலையரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர் போராட்டம் நடத்திய நிலையில்,
முத்துக்குமார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.