கன்னியாகுமரி…..
கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் கல்லூரி படித்து வந்த நிலையில், அதே கல்லூரிில் படித்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஷாரோன் ராஜுக்கு கிரீஷ்மா ரெக்கார்ட் நோட்டுகள் எழுதிக் கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்து வந்திருக்கிறார். இந்த பழக்கமே நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
மேலும் தனது காதலனுடன் பல டிக்டாக் காணொளிகளை வெளியிட்டு இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இவர் கல்லூரி படிப்பினை முடித்து வேலைக்கு சென்ற நிலையில் காதலன் மட்டும் படிப்பினை மேற்கொண்டு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் கிரீஷ்மாவிற்கு வசதியான இடத்திலிருந்து வரன் வந்ததால், அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. ஆனால் ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று காணப்பட்டதால், தான் காதலித்த ஷாரோனை தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.
பின்பு இவரைக் கொலை செய்துவிட்டால் இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று காதலி நினைத்து, தனது வீட்டிற்கு வந்த ஷாரோனுக்கு குளிர்பானத்தில் ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்துள்ளார்.
குளிர்பானத்தை குடித்ததும் வாந்தி எடுத்த ஷாரோனை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ம் தேதி சிகிசசை பலனின்றி உயிரிழந்தார்.
பின்பு பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் அருந்தியிருப்பதாக தெரியவந்த நிலையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து காதலியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கிரிஷ்மாவே இந்த கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளதோடு, போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என கூகுளில் தேடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அவ்வாறு வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே அலசி ஆராய்ந்த பின்னரே இவ்வாறான கொலையை செய்துள்ளார்.
மேலும் கிரிஷ்மாவிற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் தாய்மாமன் இவர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.