காதலன் கூட வாழ குழந்தையை கொன்ற இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

333

கன்னியாகுமரி….

குமரியில் கள்ளக்காதலனை திருமணம் செய்துகொள்வதாக இரு பிள்ளைகளுக்கும் சேமியாவில் விஷம் கலந்துகொடுத்த கொடூர தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (21). இவர்களுக்கு மூன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.

இந்நிலையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவலளித்துள்ளார்.

இதை கேட்டு பதறிப்போன ஜெகதீஷ் வேலையில் இருந்து வீட்டிற்கு வந்து குழந்தை சரணை தூக்கிக்கொண்டு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தை சரணின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும், காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திகாவின் செல்போனிற்கு வந்து சென்ற அழைப்புகள் அழிக்கப்பட்டிருப்பது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

அதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திகாவின் செல்போனிற்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது. இதில் மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் அதிகநேரம் பேசியிருப்பதும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை பேசியதும் தெரிய வரவே சுனிலை பிடித்து கஸ்டடியில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, திருமண உறவை மீறி கார்த்திகா சுனிலுடன் நெருங்கி பழகியுள்ளார். பல நேரங்களில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததுடன் செல்போனில் பேசி கள்ளக்காதலை வளர்ந்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சுனிலையே திருமணம் செய்துகொண்டு வாழ கார்த்திகாவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால், தொடக்கத்தில் கார்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் சுனில் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கார்த்திகா தனது வாக்குமூலத்தில்; இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டால் காதலன் தன்னை ஏற்றுகொள்வான் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கூறி வீட்டை சுற்றி கணவனிடம் கூறி அவர் வாங்கி வந்த பாலிடா பொடியை எலிசாகுவதற்காக தூவி வந்துள்ளார்.

மேலும், அதை ஊர்மக்கள் பார்வைக்கு பார்கும்படி நடந்து கொண்டதாகவும் பின்னர் சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்புமாவில் விஷப்பொடியை கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், குறைவாக உப்புமா சாப்பிடதால் மூத்த குழந்தைக்கு சஞ்சனா தப்பித்துக்கொள்ள, அதிகம் சாப்பிட்ட குழந்தை சரண் மட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

மேலும், சஞ்சனா விஷப்பொடியை சாப்பிட்டிருப்பது தெரிந்த பின்னர் தற்போது திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதனிடையே மார்தாண்டம் காவல்நிலையத்தில் விசாரணை நடப்பதுடன் பிரேத பரிசோதனை ஏற்பாடுகளும் நடக்கிறது. மருத்துவர்கள் அறிக்கை வந்தவுடன் கார்த்திகா மற்றும் கள்ளக்காதலன் சுனில் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.