காதலி இறந்த சோகம் தாங்க முடியாமல் வாட்சப் வீடியோ மூலம் தகவல் கொடுத்துவிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

520

சென்னை…

சென்னையில் காதலி இறந்த சோகத்தில் மன விரக்தியில் இருந்த காதலன் வாட்சப் வீடியோ மூலம தகவல் கொடுத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த 21 வயதான பிரபுகார்த்திக், சென்னையில் வங்கி தொடர்பான வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன் பெரியமேடு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்த பிரபு கார்த்திக், ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முன்னதாக தற்கொலை செய்துகொள்ளப்போவது குறித்து பேசி வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்த அவர், புடவையால் தூக்கை தயார் செய்து அதனுடன் செல்பி எடுத்து, அதனையும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.

அதிர்ச்சியான நண்பர்கள் அவரை போனில் அழைத்தபோது பிரபு கார்த்திக் எடுக்காததால் விடுதிக்கு ஓடிச் சென்று அறைக்கதவை தட்டியுள்ளனர்.

கதவு திறக்கப்படாத நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு பிரபு கார்த்திக்கின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.

பிரபுகார்த்திக் தனது தாய்மாமன் மகளை காதலித்து வந்தார் என்றும் கடந்த மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படும் நிலையில், அந்த சோகத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.