காதலி பிரிந்ததால் அப்பாவி மக்களை கொலை செய்த காவலர் : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

1195

பன்யா…

மூன்று மணி நேரத்தில் 22 அப்பாவி குழந்தைகள் உட்பட 36 பேரைக் கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கொன்ற குழந்தைகளில் பலர் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்.

கொலையாளி பன்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையாளி பன்யா போதைப்பொருள் உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து போலீஸ் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டதாகவும் தெரிகிறது.

பன்யா போதைப்பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவரது காதலி அவரை விட்டு பிரிந்து செல்வதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பன்யா இந்த கொலைகளை செய்ததாக கூறப்படுகிறது.

22 அப்பாவிகள் உட்பட 36 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய படுகொலையாக கருதப்படுகிறது. அதே சமயம் காதலியுடன் தகராறு செய்து தான் இவ்வளவு பெரிய சம்பவத்தை பன்யா செய்ததாக கூறுவதை போலீசார் ஏற்கவில்லை.

தாய்லாந்தின் காவல்துறை துணைத் தலைவர் ஜெனரல் சுர்சேட், படுகொலைகளுக்கான காரணமாக பன்யாவின் பணிநீக்கத்தையும் நிதி நெருக்கடியையும் காரணங்களாக கூறியுள்ளார். அதேநேரம், காவல்துறை சுறுசுறுப்பாக இருந்திருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களால் இவ்வளவு பெரிய சம்பவத்தை நிகழ்த்தியிருக்க முடியாது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.