காதலிப்பதாக கூறி சிறுமி கடத்தல் : 10 நாட்களுக்கு பின் வீட்டு வாசலில் விட்டு சென்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!!

383

மேலூர்….

மேலூர் அருகே காதலிப்பதாக சிறுமியை கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் தீவிரம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியை சேர்ந்த சபரி என்பவர் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய த்தில், புகார் அளித்தார். அதில் தங்களது பகுதி தும்பைப்பட்டியை சேர்ந்த சுல்தான் என்பவருடைய 26 வயதுடைய மகனான நாகூர் அனிபா தனது 17 வயது மகளை காதலிப்பதாகக் கூறி,

கடந்த 10 நாட்களுக்கு முன், கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் அனீபாவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பத்து நாட்கள் இடைவெளியில் சம்மந்தப்பட்ட வாலிபரின் குடும்பத்தினர் ஆட்டோவில் கொண்டு அதிகாலை அந்த சிறுமியை வீட்டின் முன்பாக இறக்கி விட்டு சென்றதாக கூறப்படும் நிலையில்,

மறுநாள் சிறுமியின் உடல் நிலை பாதிப்படைந்ததையடுத்து சிறுமி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட தும்பைப்பட்டி பகுதியில் டிஐஜி பொன்னி, எஸ்.பி.பாஸ்கரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர், இந்த நிலையில் வாலிபர் நாகூர் அனிபா வின் தாய் மதினா மற்றும் அவரது அண்ணன் ராஜாமுகமது ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.