காபூல் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து தாலிபான்கள் செய்த அட்டகாசம்: வைரலாகும் வீடியோ!!

387

ஆப்கானிஸ்தான்..

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி மாளிகையில், தாலிபான்கள் செய்யும் அட்டூழியங்களின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க படை வெளியேற்றத்திற்கு பின் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பகுதிகளை தாலிபான் கைப்பற்றினர். இதனையடுத்து காபூலை கைப்பற்றியதால், மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.

மேலும், துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் அஷ்ரப் கனி தனது பேஸ்புக் பக்கத்தில்போரில் மக்களின் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன்.

20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன். மக்கள் தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன். நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலீபான்கள்தான் பொறுப்பு என தெரிவித்தார்.

இதனிடையே, காபூல் நகரில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த தாலிபான்கள் அங்கிருக்கு சொகுசு சோபாக்களில் அமர்ந்து விருந்து சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், தாலிபான்கள் நாட்டை ஆக்கிரமித்துவிட்டதால், அங்கிருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடி வருவதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.