காரணமே இல்லாமல் தொடர் கொலைகள்: பிண்ணனி என்ன?

967

கரிபியன் தீவுகளில் காரணமே இல்லாமல் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரிபியன் தீவுகளை ஒட்டியுள்ள Carapichaimaவை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் அவரது சொந்த காரினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

காவல்துறை அறிக்கைககளின் படி இன்று காலை 8 மணியளவில் Carapichaima சாரா லேன் பகுதியை சேர்ந்த பார்ஸ்லி தெருவில் laventille எனும் இடத்தில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொலையுண்ட மனிதரின் பெயர் ரிச்சர்ட் எனவும் இவருக்கு காவல்துறையினை சேர்ந்தவர்களுடன் நன்கு பழக்கம் உண்டு எனவும் தெரிவருகிறது.இந்த கொலைக்கான நோக்கம் தெரியாத நிலையில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கொலையோடு இது போன்று நோக்கம் இல்லாமல் நடைபெற்ற கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டும் 199 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற தொடர் கொலை சம்பவங்கள் குறித்து பொலிஸ் ஆணையர் ஸ்டீபன் வில்லியம்ஸ் பேசும்போது நாட்டில் கொலைகள் அதிகரித்து விட்டன. குற்றங்கள் குறைய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினார்.

மேலும் இது போன்ற கொலைகளுக்கு காரணம் இந்த நிலத்தில் வாழும் குடிமக்கள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் எனவும், குற்றங்கள் அதிகரிப்பது என்பது காவல்துறையையோ அல்லது குற்றவாளிகளையோ மட்டும் பாதிப்பதில்லை அது ஒட்டு மொத்த டொபாகோ மற்றும் டிரினிடாட் நாட்டின் நன்மதிப்பை கெடுக்கும் செயல் எனவும் தெரிவித்தார்.

மேலும், இதனை சரி செய்ய இந்த நாட்டு இளைஞர்களோடு கை கோர்த்துள்ள காவல் துறை, இதன் மூலம் நிறைய இளைஞர் சமூக விழிப்புணர்வு கூடங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், இளைஞர்களை ஒழுங்குபடுத்தி விட்டால் இது போன்ற குற்றப் பிரச்சனைகள் வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்து விடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்களை இது போல வழி நடத்துவதன் மூலம் அடுத்த தலைமுறை சட்டத்திற்கு கீழ்ப்படியும் ஒரு தலைமுறையாக உருவெடுக்கும் அதன் மூலம் இது போன்ற காரணமற்ற கொலைக் குற்றங்கள் குறையும் என்றும் தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.