கேரளாவில்..
இந்தியாவில் நடந்த கோர விபத்தில் கேரள அழகியும் மற்றும் அவரது தோழியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர்(26). இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அஞ்சனா சாஜன் (24)இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இந்த அழகிப் போட்டிகள் மூலம் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார். அவ்வப்போது இருவரும் சேர்ந்து மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது உண்டு.
அந்த வகையில் ஆன்சி, அஞ்சனா உட்பட 4 பேர் திருச்சூரை சேர்ந்த நண்பர்களுடன் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை குறித்து எர்ணாகுளம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக ராய் வயலாட் எனும் ஓட்டலின் உரிமையாளர் உட்பட 5 பேரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் கைது செய்துள்ளது.
திடீர் திருப்பமாக 2 மாடல் அழகிகளுடம் விபத்து என்கிற பெயரில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.