கால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி: பிரித்தானிய மருத்துவர்களின் வித்தியாசமான சிகிச்சை!!

557

பிரித்தானியாவில் 7 வயது சிறுமி ஒருவருக்கு கால் பகுதியில் வித்தியாசமான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.லண்டனைச் சேர்ந்த 7 வயது சிறுமி எமிலியா. ஒரு வருடத்திற்கு முன்பு, இவருக்கு கால் எலும்புகளுக்கு அருகே உள்ள பகுதியில் புற்றுநோய் செல்கள் உருவாகியுள்ளது தெரியவந்தது.

’ஆஸ்டியோஜெனிக் சார்கோமா’ எனப்படும் இந்த புற்றுநோய் காரணமாக, எமிலியாவின் காலின் பகுதி நாளுக்கு நாள் வீங்கியது.இது இவ்வாறு தொடர்ந்தால் சிறுமியின் உடல் முழுவதும் புற்றுநோய் பரவும். எனவே, சிறுமியின் காலை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், கடைசி கட்டத்தில் காலை எடுக்காமலே புதிய சிகிச்சை மூலம் நோயை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், முதலில் நோய் பாதிக்கப்பட்ட எலும்பு பகுதிகளை எடுத்துள்ளனர்.

பின்னர் மீதம் உள்ள கால் எலும்பை, முட்டி எலும்புடன் திருப்பி எதிர்திசையில் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் கால் அளவு சிறியதாகும்.

இதனை சரி செய்யவே கால் பகுதியை திருப்பி எதிர்திசையில் வைத்துள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சிறுமி கொஞ்சம் சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மருத்துவர்களின் இந்த வித்தியாசமான யோசனையை முதலில் கேட்ட அனைவரும் குழம்பிப் போனார்கள். ஆனால், தற்போது எமிலியா நன்றாக இருப்பதாகவும், நன்றாக நடப்பதாகவும் அவரது தந்தை தெரித்துள்ளார்.