கால்வாய் அருகே விளையாடிய 2 சிறுவர்கள் : நொடிப்பொழுதில் நிகழ்ந்த துயரம்!!

318

திருவள்ளூரில்…

திருவள்ளூரில் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் செல்லும் இணைப்பு கால்வாயில் தண்ணீரை நிறுத்தி 6 மணிநேர தேடலுக்கு பின்பு தீயணைப்புத் துறையினர் சடலங்களாக மீட்டனர்.

திருவள்ளூரை அடுத்துள்ள சிறுகடல் பகுதியைச் செர்ந்த சாமு விக்னேஷ் (13) மற்றும் அவரது நண்பர் மோனிஷ் 11) ஆகிய இருவரும்,

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே விளையாடிய போது கால் தவறி கால்வாய்க்குள் விழுந்துள்னர். இதையடுத்து.

கால்வாயில் சிறுவர்கள் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவிpல்லை.